×

போலீஸ் கமிஷனரிடம் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட தேசியவாத காங். அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: சரத்பவார் பேட்டி

மும்பை: ‘மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் லஞ்சப்புகார் கூறிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுப்பார்’ என சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் வெடி பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கை மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பரம் பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகளில் வசூல் செய்து ₹100 கோடி தனக்கு தர வேண்டும் என வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டுமென பாஜ போர்க்கொடி தூக்கியது.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘‘உள்துறை அமைச்சர் மீதான புகார் தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுப்பார். அமைச்சர் அனில் தேஷ்முக் விகாரத்தில் முதல்வர் உத்தவுக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரீபெய்ரோ உதவ பரிந்துரை செய்துள்ளேன். அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்பதுடன் ஆழமான விசாரணை நடத்தப்படவேண்டியதும் ஆகும். இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

கார் உரிமையாளர் கொலையில் போலீஸ்காரர் கைது
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு முன் வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரான தானேவை சேர்ந்த தொழிலதிபர் மன்சூக் ஹிரன் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய மரணத்துக்கும், இந்த வழக்கில் கைதான உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஷேவுக்கும் தொடர்பிருக்காலம் என்று ஹிரனின் மனைவி கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஹிரன் கொலை தொடர்பாக, போலீஸ்காரர் விநாயக் ஷிண்டே உட்பட 2 பேரை நேற்று கைது செய்தனர்.

Tags : Nationalist Cong ,Chief Minister ,Minister ,Sarabhavar , Interview with Commissioner of Police, Rs.100 crore, bribe, Sarabjit
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...